/உள்ளூர் செய்திகள்/தேனி/ சின்னமனுாருக்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் தேவை சின்னமனுாருக்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் தேவை
சின்னமனுாருக்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் தேவை
சின்னமனுாருக்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் தேவை
சின்னமனுாருக்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் தேவை
ADDED : ஜூன் 02, 2024 04:04 AM
சின்னமனூர்: சின்னமனூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டிராபிக் போலீஸ் ஸ்டேசன் அமைக்க அரசு உத்தரவிட வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, கம்பம் ஆசிய ஊர்களில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளன. பைபாஸ் ரோடு பயன்பாட்டிற்கு வந்தால் நெரிசல் இருக்காது என்றனர். ஆனால் பைபாஸ் ரோடு பயன்பாட்டிற்கு வந்த பின்பும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
சின்னமனூரை சுற்றியுள்ள குச்சனூர், மார்க்கையக்கோட்டை, ஒடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், காமாட்சிபுரம், கன்னிசேர்வை பட்டி, முத்துலாபுரம் உள்ளிட்ட எண்ணற்ற கிராமங்களை சேர்ந்த பொதுமங்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் சின்னமனூர் வருகின்றனர். இதனால் சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்சையன்கோட்டை ரோடு, மெயின்ரோடு பகுதிகளில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து உள்ளது.
சின்னமனூர் போலீஸ் ஸ்டேசனுக்கும் அதிகாரவரம்பு எல்லை அதிகம் இருப்பதால், போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. மெயின்ரோட்டில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஊர்க்காவல் படையை சேர்ந்த சிலர் எப்போதாவது போக்குவரத்து சீரமைப்புக்கு வருகின்றனர்.
அவர்களும் டிராபிக் நெரிசல் உள்ள சீப்பாலக்கோட்டை ரோட்டில் நிற்பதில்லை. இதனால் காலை, மாலையில் இந்த ரோட்டில் போக முடியாத நிலை உள்ளது. எனவே சின்னமனூர் நகருக்கு தனியாக டிராபிக போலீஸ் ஸ்டேசன் அமைத்தால் தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியும்.