/உள்ளூர் செய்திகள்/தேனி/ பி.எம்., கிஷானில் பயன்பெறுவோர் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது பி.எம்., கிஷானில் பயன்பெறுவோர் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
பி.எம்., கிஷானில் பயன்பெறுவோர் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
பி.எம்., கிஷானில் பயன்பெறுவோர் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
பி.எம்., கிஷானில் பயன்பெறுவோர் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
ADDED : ஜூன் 02, 2024 04:03 AM
தேனி: தேனி மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 20ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.
மத்திய அரசின் சார்பில் பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவத்தொகை வழங்கும் திட்டம் 2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதுவரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. திட்டம் துவங்கப்பட்டபோது மாவட்டத்தில் 45ஆயிரத்திற்கும் மேலான விவசாயிகள் பதிவு செய்து பலனடைந்தனர்.இந்நிலையில் வருமான வரி செலுத்துவோர், அரசுப்பணியில் உள்ளவர்கள், ஓய்வூதியம் மாதம் ரூ.10ஆயிரத்திற்கு மேல் பெறுவோர், ஒரே ரேஷன் கார்டில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அதற்கான இணையதளத்தில் விவசாயிகள் ஆதார் உள்ளிட்ட விவரங்களை இ-கே.ஒய்.சி., செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். திட்டத்தில் வழங்கப்பட்ட 16வது தவணையில் 18,500 விவசாயிகள் பலனடைந்தனர். வேளாண்துறையினர் கூறுகையில், இத்திட்டத்தில் பயனடையும் விவசாயிகளில் 5ஆயிரம் பேர் வரை இ.கே.ஒய்.சி., பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்களும் இணைக்கப்பட்டால் 23 ஆயிரம் பேர் பலனடைவர் என்றனர்.