/உள்ளூர் செய்திகள்/தேனி/ முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 02, 2024 02:38 AM

கூடலுார்:தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2412 ஏக்கர் என தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் அணையில் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக இருந்ததால் (மொத்த உயரம் 152 அடி) நேற்று தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.
தண்ணீர் திறப்பு
தேக்கடி ஷட்டரில் உள்ள மதகை இயக்கி முதல் போக சாகுபடிக்கு வினாடிக்கு 200 கன அடி நீர், குடிநீருக்கு 100 கன அடி என மொத்தம் 300 கன அடி நீரை பெரியாறு வைகை பாசன செயற்பொறியாளர் அன்புச்செல்வன் திறந்து வைத்தார். அணையில் நீர் இருப்பைப் பொறுத்து 120 நாட்களுக்கு திறக்கப்படும். இந்த நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகாரணமாக நீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர், கலெக்டர் கலந்து கொள்ளவில்லை. விவசாயிகளும் அழைக்கப்படவில்லை. உதவி செயற்பொறியாளர்கள் மயில்வாகனன், குமார், உதவி பொறியாளர்கள் பிரேம் ராஜ்குமார், பிரவீன்குமார், ராஜகோபால், நவீன்குமார் ஆகியோர் இருந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக ஜூன் முதல் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் இரு போக நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடிந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2021 ஜூன் 1ல் தண்ணீர் திறந்தபோது நீர்மட்டம் 130.90 அடியாகவும், 2022 ஜூன் 1ல் 132.35 அடியாகவும், 2023 ஜூன் 1ல் 118.40 அடியாகவும் இருந்தது. தற்போது 119.15 அடியாக உள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழையால் நீர்மட்டம் வெகுவாக உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மின் உற்பத்தி பாதிப்பு
வழக்கமாக பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் போது லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையம் மற்றும் முல்லைப் பெரியாற்றில் உள்ள மினி பவர் ஹவுசில் மின்உற்பத்தி துவங்கும்.
ஆனால் நேற்று 300 கன அடி நீர் திறக்கப்பட்டும் மின் உற்பத்தி துவங்காததால் மின் இழப்பு ஏற்பட்டது.
அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக வெளியேறுகிறது.