/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை தேவை சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை தேவை
சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை தேவை
சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை தேவை
சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 03, 2024 05:35 AM
கம்பம் : சுருளியாறு மின் நிலையத்தில் குறைந்த அளவு நீரில் அதிக மின்சாரம் எடுக்க முடியும் என்பதால் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப், சுருளியாறு நீர் மின் நிலையங்கள் உள்ளன. லோயர் கேம்ப் மின் நிலையத்தில் 168 மெகாவாட் உற்பத்தி நடைபெறுகிறது.
4 ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் என்பது 42 மெகாவாட்டாக திறன் அதிகரிக்கப்பட்டது. 140 மெகாவாட்டாக இருந்தது 168 மெகாவாட் என திறன் உயர்த்தப்பட்டது.
ஆனால் சுருளியாறு மின் நிலையத்தில் 1978ல் இருந்து 35 மெகாவாட் என்ற நிலையில் உள்ளது. நீர் மின் உற்பத்தியை பொறுத்தவரை, தண்ணீர் கொண்டு வரும் உயரம் முக்கிய காரணியாகும்.
லோயர்கேம்ப்பில் 35 மெகாவாட் உற்பத்திற்கு 400 கன அடி தண்ணீர் தேவைப்படும். ஆனால் சுருளியாறு நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தி செய்ய 141 கன அடி போதுமானது.
காரணம் சுருளியாறு மின் நிலையத்தில் 971 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. எனவே சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறன் 35 மெகாவாட் என்பதை 42 மெகாவாட்டாக உயர்த்த வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.