Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ புதர் மண்டிய சுத்துவாங்கி ஓடை ஷட்டர்; 18ம் கால்வாய் நீர் வெளியேறுவதில் சிக்கல்

புதர் மண்டிய சுத்துவாங்கி ஓடை ஷட்டர்; 18ம் கால்வாய் நீர் வெளியேறுவதில் சிக்கல்

புதர் மண்டிய சுத்துவாங்கி ஓடை ஷட்டர்; 18ம் கால்வாய் நீர் வெளியேறுவதில் சிக்கல்

புதர் மண்டிய சுத்துவாங்கி ஓடை ஷட்டர்; 18ம் கால்வாய் நீர் வெளியேறுவதில் சிக்கல்

ADDED : ஜூலை 29, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
போடி : போடி அருகே பத்திரகாளிபுரத்தில் அமைந்துள்ள சுத்துவாங்கி ஓடையின் வழியாக 18 ம் கால்வாய் நீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்ட ஷட்டர் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

போடி ஒன்றியம் டொம்புச்சேரி பத்திரகாளிபுரத்தில் அமைந்து உள்ளது சுத்து வாங்கி ஓடை. 18ம் கால்வாய் நீர் திறந்து விடும் நிலையில் சுத்து வாங்கி ஓடையில் அமைக்கப்பட்டு உள்ள ஷட்டர் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து டொம்புச்சேரி, சாலிமரத்துப்பட்டி, பண்ணைத்தோப்பு, சிறுகுளம், பெருங்குளம், சம்போடை, வாரி ஓடை வழியாக கோடங்கிபட்டி கண்மாய் பகுதியை சென்றடையும். இதன் மூலம் 1200 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வந்தன. தற்போது பத்திரகாளிபுரத்தில் சுத்துவாங்கி ஓடை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ஷட்டரில் தண்ணீர் வெளியேறும் பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமித்தும், குப்பை கொட்டியும், முட்செடிகளால் சூழ்ந்து உள்ளன. இதனால் 18 ம் கால்வாய் தண்ணீர் மட்டும் இன்றி, மழைகாலங்களில் பெய்யும் நீரானது ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேற முடியாத நிலையில் ஓடை பகுதியில் குளம் போல் தேங்கி விடுகிறது.

இதனால் 18ம் கால்வாய் நீர், மழை நீர் ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மழை காலங்களில் ஓடையில் தண்ணீர் தேங்குவதோடு, ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து வீணாக செல்கிறது.

18 ம் கால்வாய் நீரை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகளின் கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதற்கு வழி இன்றியும், விவசாய நிலங்களில் தண்ணீரை தேக்கிடவும், போதிய விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.சுத்துவாங்கி ஓடை பகுதியில் 18 ம் கால்வாய் தண்ணீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஷட்டர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீர் சீராக செல்ல பொதுப்பணிதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us