ADDED : ஜூலை 29, 2024 12:25 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில், 'மூலக்கூறு பொருந்தச் செய்தல், உயிரியலுக்குரிய மென்பொருள் தொகுப்பு' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் சியாமளா கவுரி வரவேற்றார்.
கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா பேசினர். ஹோலிகிராஸ் கல்லுாரி உதவி பேராசிரியர் பொன்நிவேதா, 'மூலக்கூறு பொருந்துதல், உயிரியல் மென்பொருள் தொகுப்பு' குறித்து எடுத்துரைத்து, இத்துறையின் உயர்கல்விகள், வேலை வாய்ப்பு தகவல்களையும் மாணவிகளிடம் கூறி, அதுதொடர்பான மின்னஞ்சல் தகவல்களை விளக்கிக் கூறினார். பின் மாணவிகளின் சந்தேகங்களுக்கு நேரிடையாக விடையளித்தார். துறை பேராசிரியர் மலர்விழி நன்றி தெரிவித்தார்.