ADDED : ஜூலை 25, 2024 04:59 AM
தேனி: நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் 'அனுபவப் பகிர்வே கற்றலுக்கான திறவுகோல்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா பேசினர்.
கல்லுாரி முன்னாள் மாணவி சூரிய சந்திரமதி நேர்காணலில் பங்கேற்பது, புதிய தொழில்நுட்பங்கள், கல்லுாரியில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதன் நன்மைகள் என மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் பேசினார்.
கல்லுாரி துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.