/உள்ளூர் செய்திகள்/தேனி/ 20 ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்காததால் நசியும் விவசாயம் எரதிமக்காள்பட்டி விவசாயிகள் சோகம் 20 ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்காததால் நசியும் விவசாயம் எரதிமக்காள்பட்டி விவசாயிகள் சோகம்
20 ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்காததால் நசியும் விவசாயம் எரதிமக்காள்பட்டி விவசாயிகள் சோகம்
20 ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்காததால் நசியும் விவசாயம் எரதிமக்காள்பட்டி விவசாயிகள் சோகம்
20 ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்காததால் நசியும் விவசாயம் எரதிமக்காள்பட்டி விவசாயிகள் சோகம்

தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறும் கண்மாய்
தங்கையா, எரதிமக்காள்பட்டி: கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத கண்மாயில் தற்போது முள்செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. நீர் வரத்து ஓடைகள், நீர்த்தேக்க பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருந்து ஓடைகளில் வரும் நீர் ஜி.உசிலம்பட்டி, ராமலிங்கபுரம் பகுதியில் உள்ள குளங்கள், கண்மாய்களைக் கடந்து எரதிமக்காள்பட்டி கண்மாய்க்கு வந்து சேர்வதில்லை. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து விவசாய கிணறுகள் போர்வெல்கள் பாதிப்படைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் தேர்தல் பிரச்சாரத்தில் கண்மாயில் நீர் தேங்கும் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி தருகின்றனர். தேர்தலுக்குப் பின் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கிறது.
கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை
ஜோதி, எரதிமக்காள்பட்டி: கடந்த 30 ஆண்டுகளில் இப்பகுதியில் பல ஏக்கர் தரிசாக போய்விட்டன. மழை பெய்தால் மட்டுமே மானாவாரி விவசாயம் என்ற நிலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் உள்ளன. கால்நடை வளர்ப்பு தொழிலை நம்பி இப்பகுதியில் 1000க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கால்நடை வளர்ப்பில் தீவன பற்றாக்குறை, கால்நடைகளுக்கான தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். 500 மீட்டர் தூரத்தில் ஆற்று நீர் செல்லும் கால்வாய் இருந்தும் அந்த நீரை கண்மாய்க்கு கொண்டு வரும் நடவடிக்கையை யாரும் எடுக்கவில்லை. கண்மாயில் நீர் தேங்காததால் எம்.சுப்புலாபுரம், மரிக்குண்டு, பாலசமுத்திரம், எரதிமக்காள்பட்டி, பழனித்தேவன்பட்டி கிராமங்களிலும் விவசாயம் பாதிப்படைகிறது.
கால்வாய் நீரை தேக்கிட வேண்டும்
நல்லதம்பி எரதிமக்காள்பட்டி: கண்மாய்க்கரை சரிந்து பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. சரி செய்யும் நடவடிக்கை இல்லை. மூலவைகை ஆற்றில் துரைச்சாமிபுரம் தடுப்பணையிலிருந்து அடைக்கம்பட்டி, தேக்கம்பட்டி வழியாக வரும் கால்வாய் நீரை ஆண்டுக்கு ஒரு முறை கண்மாயில் தேக்கினாலே போதும். இப்பகுதி செழிப்பாகிவிடும். முல்லைப் பெரியாறு அணை உபரி நீரை ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களுக்கு குழாய் மூலம் கொண்டுவர விவசாயிகள் போராடுகின்றனர். அதற்கான தீர்வும் கிடைக்கவில்லை. விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே முக்கிய தொழிலாக உள்ள ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மத்திய மாநில அரசுகள் தனிக் கவனம் செலுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.