/உள்ளூர் செய்திகள்/தேனி/ சின்னமனுார்,காமயகவுண்டன்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் சின்னமனுார்,காமயகவுண்டன்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்
சின்னமனுார்,காமயகவுண்டன்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்
சின்னமனுார்,காமயகவுண்டன்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்
சின்னமனுார்,காமயகவுண்டன்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்
ADDED : ஜூலை 25, 2024 04:59 AM
கம்பம்: சின்னமனூர், காமயகவுண்டன்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளை மின்வாரியம் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடையூறு இல்லாத சீரான மின் வினியோகத்திற்கும், புதிய மின் இணைப்புகள் தாமதம் இன்றி வழங்க துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக வழித்தட மின் இழப்பை குறைக்கவும் அந்தந்த பகுதியில் துணை மின்நிலையங்கள் அமைக்கப் படுகிறது. தேனி மாவட்டத்தில் வண்ணாத்திபாறை, கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, தேவாரம், ராசிங்காபுரம், சின்ன ஒவுலாபுரம், காமாட்சிபுரம், தேனி, மதுராபுரி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட 20 க்கும் - மேற்பட்ட துணை மின்நிலையங்கள் உள்ளன.
சின்னமனுார் நகராட்சியில் மட்டும் நீண்ட காலமாக துணை மின்நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம் இங்கு உள்ளது. சமீபத்தில் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேடும் பணிகள் துவங்கியது . வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் ஒன்றை தேர்வு செய்தும் அமைக்கும் பணி துவங்கவில்லை. இடத்தை கையகப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சின்னமனூரில் துணை மின் நிலையம் அமைவது கானல் நீராக போய்விடும்.
இதேபோல காமயகவுண்டன்பட்டியில் துணை மின்நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கி பல ஆண்டுகளை கடந்து விட்டது.
இடமும் தேர்வு செய்துள்ளனர். மின்வாரியம் என்ன காரணத்தாலோ பணிகளை துவங்காமல் உள்ளது.
சின்னமனூர் மற்றும் காமயகவுண்டன்பட்டியில் துணை மின்நிலையங்கள் அமைக்க மின்வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.