ADDED : ஜூலை 05, 2024 05:32 AM
தேனி: திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலையில் பி.எஸ்.சி.,வேளாண் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேனி விதைப்பரிசோதனை நிலையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.
உற்பத்தியில் பரிசோதனையின் பங்கு, விதைகள் எவ்வாறு தேர்வு செய்வது, ஸ்பெக்ஸ் இணையதளத்தின் பயன்பாடு, விதை மாதிரி முடிவுகள் வழங்குவது, விதைகளில் உள்ள ஈரப்பதம், புறத்துாய்மை, பிறரக கலவன் கண்டறிதல், முளைப்புத்திறன் கண்டறிவது, உபகரணங்கள் பற்றி விளக்கப்பட்டது. வேளாண் அலுவலர்கள் சத்யா, மகிஷாதேவி பயிற்சி வழங்கினர்.