ADDED : ஜூலை 05, 2024 05:33 AM

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி 33வது வார்டு பொதுமக்கள் சார்பாக தி.மு.க., கவுன்சிலர் கடவுள் தலைமையில் மனு அளித்தனர்.
மனுவில், 'மதுரை கொச்சி தேசிய நெடுஞ்சாலை கருவேல்நாயக்கன்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை உள்ளது. தற்போது ரோடு விரிவாக்கத்தினால் சிலை அருகே ரோட்டினை கடப்பதாலும் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் சிலையை 15 அடி தள்ளி வைத்திட அனுமதி அளிக்க கோரினர்.
முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர் செல்லப்பாண்டி, தே.மு.தி.க., நகர செயலாளர் முருகராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.