/உள்ளூர் செய்திகள்/தேனி/ நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம் நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 05, 2024 05:33 AM
தேனி: மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் கட்டுப்பாட்டில் தாலுகா வாரியாக ஆண்டிப்பட்டி 43, பெரியகுளம் 37, தேனி 14, உத்தமபாளையத்தில் 45, போடியில் 23 என மொத்தம்162 நீர்நிலைகள் உள்ளன.
இவற்றில் இருந்து நிலங்களுக்கு விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக களிமண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேவைப்படுவோர் tnesevai.tn.gov.in என்ற இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் நீர்நிலைகள் விண்ணப்பிப்பவரின் தொழில் செய்யும் இடம், விவசாய நிலம், வசிப்பிடம் ஒரே தாலுகாவில் இருந்தால் மட்டும் அனுமதி வழங்கப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.