/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுற்றுலா பயணிகளுக்கு தீயணைப்பு துறை பயிற்சி சுற்றுலா பயணிகளுக்கு தீயணைப்பு துறை பயிற்சி
சுற்றுலா பயணிகளுக்கு தீயணைப்பு துறை பயிற்சி
சுற்றுலா பயணிகளுக்கு தீயணைப்பு துறை பயிற்சி
சுற்றுலா பயணிகளுக்கு தீயணைப்பு துறை பயிற்சி
ADDED : ஜூலை 05, 2024 05:34 AM

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காலங்களில் சுற்றுலா பயணிகள் கரையேறுவது குறித்து தீயணைப்புத் துறையினர் செயல்விளக்கம் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
தென்மேற்கு பருவமழை காலங்களில் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள், திடீர் வெள்ளப்பெருக்கு காலங்களில் சிக்கி கொண்டால் எவ்வாறு கரையேறுவது என தீயணைப்புத்துறையினர் ஒத்திகை செயல்விளக்கம் பயிற்சி அளித்தனர். தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பழனி தலைமையில் 8 வீரர்கள் கும்பக்கரை அருவி மேற்பகுதி நீரோடை பகுதியில் இறங்கினர். நம்மிடம் உள்ள பொருட்களான ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் குடிநீர் பாட்டில், 20 லிட்டர் குடிநீர் கேன், குடம், முழு தேங்காய் மட்டைகள் ,லைஃப் ஜாக்கெட், கயிறு உள்ளிட்ட உபகரணங்களை எவ்வாறு பிடித்து கரையேறுவது குறித்து தீயணைப்புத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கும், இக்கட்டான சூழலில் வனத்துறை பணியாளர்கள், சுற்றுலா பயணிகளை எவ்வகையில் காப்பற்ற வேண்டும் என செயல் விளக்கம் அளித்தனர்.-