/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாநில அளவில் சிறந்த சித்தா டாக்டர் விருது பெற்ற இருவருக்கு பாராட்டு மாநில அளவில் சிறந்த சித்தா டாக்டர் விருது பெற்ற இருவருக்கு பாராட்டு
மாநில அளவில் சிறந்த சித்தா டாக்டர் விருது பெற்ற இருவருக்கு பாராட்டு
மாநில அளவில் சிறந்த சித்தா டாக்டர் விருது பெற்ற இருவருக்கு பாராட்டு
மாநில அளவில் சிறந்த சித்தா டாக்டர் விருது பெற்ற இருவருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 05, 2024 05:35 AM

தேனி: உலக டாக்டர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த விழாவில் மாநில அளவில் சிறந்த சித்த மருத்துவர்களாக விருது பெற்ற இருவரை தேனி கலெக்டர் ஷஜீவனா பாராட்டி கவுரவித்தார்.
தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துமவனை செயல்படுகிறது.
இங்கு சித்தா டாக்டராக சங்கரராஜ் உள்ளார். இவர் கொரோனா காலத்தில் கபசுர குடிநீரை மருத்துவக் கல்லுாரி சிகிச்சை பெற்றவர்களுக்கு வழங்கி, அதனை உட்கொண்ட நோயாளிடம் நோய் எதிர்ப்பு திறனை ஆய்வு செய்து அதை உலகளவில் இரண்டு சர்வசேத நாடுகளின் ஆய்வறிக்கையில் இடம் பெற செய்தார். இது தமிழ் சித்த மருத்துவத்திற்கு பெருமை சேர்த்தார். இதனால் 2023ல் சிறந்த சித்தா டாக்டர் விருது பெற்றார்.
கண்டமனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் மு.கல்பனா. இவர் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை மருந்துகள் இன்றி சித்தமருத்துவ முறையான வர்ம சிகிச்சை மூலம் நுாற்றுக்கணக்கான சுகப்பிரசவங்கள் நடக்க சிகிச்சை அளித்துள்ளார். இச் சேவைக்காக 2024ல் சிறந்த சித்தா டாக்டர் விருது பெற்றுள்ளார்.
இருவரையும் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் நடந்த உலக மருத்துவ தின விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விருது வழங்கி கவுரவித்தார்.
இதனை தொடர்ந்து இருவரையும் தேனி கலெக்டர் ஷஜீவனா சால்வை அணிவித்து பாராட்டினார். அருகில் தேனி அரசு ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையில் பொறுப்பாளர் முத்தையா, சித்தா டாக்டர்கள் உடனிருந்தனர்.