/உள்ளூர் செய்திகள்/தேனி/ மக்காச் சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டம் விதைப்பு முதல் அறுவடை வரை பயிற்சி மக்காச் சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டம் விதைப்பு முதல் அறுவடை வரை பயிற்சி
மக்காச் சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டம் விதைப்பு முதல் அறுவடை வரை பயிற்சி
மக்காச் சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டம் விதைப்பு முதல் அறுவடை வரை பயிற்சி
மக்காச் சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டம் விதைப்பு முதல் அறுவடை வரை பயிற்சி
ADDED : ஜூலை 05, 2024 05:32 AM
சின்னமனூர்: மக்காச் சோளம் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில் நுட்பங்களை விளக்கி கூறும் 'அட்மா' திட்ட பண்ணைப்பள்ளியில் பயிற்சி நடைபெற்றது.
மாவட்டத்தில் மக்காச் சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சின்னமனூர் அருகே உள்ள சங்கராபுரத்தில் பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.
இதற்கென அட்மா திட்டத்தின் கீழ் முன்னணி செயல்விளக்க திடல் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வயல்வெளி பள்ளியில் வட்டாரத்தில் மக்காச் சோளம் சாகுபடி செய்யும் 25 விவசாயிகளை அழைத்து வந்து பயிற்சி வழங்கப்பட்டது.
சின்னமனூர் 'அட்மா' திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரேவதி கூறுகையில், மக்காச் சோளப் பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பின்கீழ் விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வடை ஆறு பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்.
முதல் வகுப்பில் மண் பரிசோதனை , நிலம் தயார் செய்தல், விதைப்பு பற்றி விளக்கப்பட்டது. நேற்று இரண்டாம் வகுப்பில் நீர் மேலாண்மை, அடியுரமிடுதல் பற்றி விளக்கப்பட்டது. தொடர்ந்து அறுவடை வரை இன்னமும் நான்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றார். இந்த பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்புகளுக்கு சின்னமனூர் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி தலைமை வகித்தார்.
'அட்மா' திட்ட வட்டார உதவி தொழில் நுட்ப மேலாளர் விஜயகுமார், உதவி வேளாண் அலுவலர் விஜயசங்கர் பங்கேற்றனர்.
பணி ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர்கள் புகழேந்தி, சின்ன வெளியப்பன் தொழில்நுட்பங்களை விளக்கி பேசினார்கள். ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.