/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி மானியம் மீண்டும் வழங்க கோரிக்கை ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி மானியம் மீண்டும் வழங்க கோரிக்கை
ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி மானியம் மீண்டும் வழங்க கோரிக்கை
ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி மானியம் மீண்டும் வழங்க கோரிக்கை
ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி மானியம் மீண்டும் வழங்க கோரிக்கை
ADDED : ஜூன் 15, 2024 07:03 AM
கம்பம் : ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி மானியம் மீண்டும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம், மத்திய அரசின் 15 வது நிதி குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி மானியம் போன்ற ஒரு சில மானியங்களே வழங்கப்படுகிறது. மின்கட்டணம், சம்பளம், பொதுச்சுகாதாரம் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகள் இந்த மானியங்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி மானியத்தை அரசு ரத்து செய்து விட்டது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ.50 ஆயிரம் முதல் ஊராட்சின் பரப்பு, மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. முத்திரைத் தாள், கேளிக்கை வரி உள்ளிட்ட பல இனங்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாயில் இருந்து இந்த மானியம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த மானியத்தை நிறுத்தியதால் ஊராட்சிகளில் செலவினங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும் வரி வருவாயை நேரடியாக கையாள முடியாமல், கணக்கில் செலுத்தி பின்னர் அரசு தரும் 70 சதவீத வரி வருவாயை வைத்தே நிர்வாகம் செய்ய வேண்டி உள்ளது. எனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி மானியத்தை ஊராட்சிகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.