/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆறு கிலோ கஞ்சாவுடன் கணவன், மனைவி கைது ஆறு கிலோ கஞ்சாவுடன் கணவன், மனைவி கைது
ஆறு கிலோ கஞ்சாவுடன் கணவன், மனைவி கைது
ஆறு கிலோ கஞ்சாவுடன் கணவன், மனைவி கைது
ஆறு கிலோ கஞ்சாவுடன் கணவன், மனைவி கைது
ADDED : ஜூன் 15, 2024 07:03 AM
கம்பம் : கம்பம் ஏகலூத்து ரோட்டில் தோட்டங்களில் கஞ்சா பதுக்கி வைத்து வியாபாரம் நடைபெறுவதாக தகவல் வெளியானது. தெற்கு எஸ்.ஐ. கோதாண்டராமன் தலைமையிலான போலீசார் ஏகலூத்து ரோட்டில் மாந்தோப்பிற்குள் நின்றிருந்தவர்களை பார்த்து சந்தேகப்பட்டு உள்ளே சென்றனர். அங்கிருந்த நால்வரில் இருவர் தப்பியோடினர். அங்கு நின்றிருந்த கூலத் தேவர் முக்கு ஆசாரிமார் தெருவை சேர்ந்த ரத்தினமணி 53, மனைவி சித்ரா 44 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தப்பியோடிய சாமாண்டிபுரம் சுரேஷ், கம்பம் சிவனம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர். கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.