/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ஆக்கிரமிப்பால் நெருக்கடி கம்பம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ஆக்கிரமிப்பால் நெருக்கடி
கம்பம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ஆக்கிரமிப்பால் நெருக்கடி
கம்பம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ஆக்கிரமிப்பால் நெருக்கடி
கம்பம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ஆக்கிரமிப்பால் நெருக்கடி
ADDED : ஜூன் 15, 2024 07:02 AM
கம்பம், : கம்பம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் நடக்க முடியாதஅளவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கம்பம் நகரில் மெயின்ரோடு மட்டுமின்றி நகரில் வேலப்பர்கோயில் வீதி, காந்திஜி வீதி,கம்பமெட்டு ரோடு, காமயகவுண்டன்பட்டி ரோடு சந்திப்பு என பல தெருக்களில் போக்குவரத்துநெருக்கடி அதிகரித்துவருகிறது.
இதில் பழைய பஸ்ஸ்டாண்ட் ரோடு மிக மோசமான நிலையில் உள்ளது . இந்த ரோட்டில் வடக்கு பகுதியில் நகராட்சி அமைத்த நடைமேடை முழுக்க கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.ரோட்டின் நடுவில்சென்டர்மீடியன் வைத்துள்ளதால் தெற்கு பகுதிபஸ் நிறுத்தமாக மாறிவிட்டது.
பற்றாக்குறைக்கு ஆட்டோக்கள் வரிசைகட்டி நின்று கொள்கிறது. இதனால் பழைய பஸ்ஸ்டாண்ட் வீதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை எழுந்துள்ளது .
இங்குள்ள டிராபிக் போலீசார் இந்த ரோட்டை கண்டு கொள்ளவில்லை. டிராபிக் சிக்னலில் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு மட்டுமல்லாமல் வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி, தியாகி வெங்கடாச்சலம் வீதி, காந்தி சிலை சந்திப்பு,டாக்சி ஸ்டாண்ட் சந்திப்பு என நகரின் பல பகுதிகளில் நெருக்கடிஉள்ளது.டிராபிக் போலீசாரோ, சிக்னல் அருகில் மட்டும் நிற்கின்றனர்.
நெருக்கடியை தவிர்க்க டிராபிக் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். உயர் அதிகாரிகள் டிராபிக் போலீசாரின் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.