காட்டு மாடு தாக்கி பசுங்கன்று காயம்
காட்டு மாடு தாக்கி பசுங்கன்று காயம்
காட்டு மாடு தாக்கி பசுங்கன்று காயம்
ADDED : ஜூன் 15, 2024 07:03 AM
மூணாறு : மூணாறு அருகே வட்டவடையில் மேய்ச்சலுக்குச் சென்ற பசு கன்றை காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயமடைந்தது.
வட்டவடை, வஞ்சிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராமைய்யா. இவருக்குச் சொந்தமான பசு கன்று வீட்டின் அருகில் உள்ள விளை நிலத்திற்கு மேய்ச்சலுக்குச் சென்றது.
அப்போது அங்கு வந்த நான்கு காட்டு மாடுகளைக் கொண்ட கும்பலில் ஒன்று பசு கன்றை தாக்கியது. அதில் கொம்புகளால் குத்தப்பட்டு கன்றுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அதன் அலறல் சப்தம் கேட்டுச் சென்ற ரமைய்யா உள்ளிட்டோர் காட்டு மாடு கன்றை தாக்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூச்சலிட்டு காட்டு மாடுகளை காட்டிற்குள் விரட்டி விட்டு கன்றை மீட்டனர்.