Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ அரசு மருத்துவக்கல்லுாரியில் வாகனங்களுக்கு கட்டணம் மீண்டும் வசூல் ஆளும் கட்சி பின்னணியில் தொடரும் அடாவடி

அரசு மருத்துவக்கல்லுாரியில் வாகனங்களுக்கு கட்டணம் மீண்டும் வசூல் ஆளும் கட்சி பின்னணியில் தொடரும் அடாவடி

அரசு மருத்துவக்கல்லுாரியில் வாகனங்களுக்கு கட்டணம் மீண்டும் வசூல் ஆளும் கட்சி பின்னணியில் தொடரும் அடாவடி

அரசு மருத்துவக்கல்லுாரியில் வாகனங்களுக்கு கட்டணம் மீண்டும் வசூல் ஆளும் கட்சி பின்னணியில் தொடரும் அடாவடி

UPDATED : ஜூலை 21, 2024 10:08 AMADDED : ஜூலை 21, 2024 08:11 AM


Google News
Latest Tamil News
தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஆளும் கட்சி பின்னணியில் மீண்டும் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களுக்கு அடாவடி வசூல் செய்ய துவங்கினர்.

அரசு மருத்துவக்கல்லுாரிக்கு தினமும் பல ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி கேரளா உள்பட பல மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகின்றனர்.

நோயாளிகளை பார்க்க உறவினர்கள், நண்பர்கள் டூவீலர், ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். இந்த வளாகத்திற்குள் வாகனங்கள் நிறுத்த 2023ல் டெண்டர் விடப்பட்டிருந்தது. தனியார் நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூலித்தனர்.

ஆனால் இங்கு வாகனங்கள் நிறுத்த எந்த வசதியும் செய்யாமல் வசூலில் மட்டும் கறார் காட்டினர். கடந்த ஆண்டு இறுதியில் டெண்டர் காலம் முடிந்தும் தொடர் வசூலில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் மருத்துவமனை நிர்வாகம் வாகன கட்டணம் வசூலித்தவர்களை எச்சரித்து வெளியேற்றியது. கடந்த 6 மாதங்களாக மக்கள் கட்டணம் செலுத்தாமல் வாகனங்களை நிறுத்தி எடுத்து சென்றனர். இந்நிலையில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆளும் கட்சி பிரமுகர்கள் நெருக்கடி கொடுத்தனர்.

நெருக்கடியை சமாளிக்க முடியாத முன்னாள் டீன் கட்டணம் வசூலிக்க பரிந்துரை கடிதம் வழங்கி உள்ளார். இந்த கடிதத்தை பின்புலமாக வைத்து முறையான ஏலம் விடாமல் தற்போது வாகன வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களுக்கு 'டோக்கன்' வினியோகித்து வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலிக்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இது குறித்து மருத்துவமனை கட்டட பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் காமராஜ் கூறுகையில், ' வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க யாருக்கும் ஏலம் விடவில்லை.சிலர் வசூலிப்பது பற்றி தகவல் தெரிந்தது. உடனே மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து வசூலித்தவரை எச்சரித்து அனுப்பி விட்டோம்' என்றார்.

கடந்த காலங்களில் அரசு பொது மருத்துவமனைகளுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் இருந்தது. இந்த உத்தரவை பின்பற்றி தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் வாகன கட்டணம் வசூலிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் மருத்துவமனையில் டூவீலர் திருட்டு, அலைபேசி திருட்டு சம்பவங்களை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us