ADDED : ஜூலை 21, 2024 08:11 AM

தேனி: தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளைத்தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு 5 மாதமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்மருத்துவ செலவு தொகையை முழுமையாக வழங்கி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாநில துணைத்தலைவர் சந்திரசேகரன், கிளை செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் அமிர்தவேல்பாண்டியன், அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி ராமமூர்த்தி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி ரத்தினம் உள்ளிடோர் பங்கேற்றனர்.