ADDED : ஜூலை 21, 2024 08:10 AM
போடி: போடி தென்றல் நகரில் காய்கறி வாரச்சந்தை ஞாயிறு தோறும் நடைபெறுவது வழக்கம். போடி அதனை சுற்றியுள்ள விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்வார்கள்.
இந்நிலையில் வாரச்சந்தை அருகே உள்ள மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள வளாகத்தில் சார்பு நீதிமன்றம் இன்று திறப்பு விழா காண உள்ளது. இதனையொட்டி இன்று நடைபெற இருந்த நகராட்சி காய்கறி வாரச்சந்தை நாளை (ஜூலை 22) திங்கள் கிழமை நடைபெறும் என போடி நகராட்சி கமிஷனர் ராஜலட்சுமி தெரிவித்து உள்ளார்.