/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனியில் இடையூறாக இருந்த 23 மரங்கள் 2.19 லட்சத்திற்கு ஏலம் தேனியில் இடையூறாக இருந்த 23 மரங்கள் 2.19 லட்சத்திற்கு ஏலம்
தேனியில் இடையூறாக இருந்த 23 மரங்கள் 2.19 லட்சத்திற்கு ஏலம்
தேனியில் இடையூறாக இருந்த 23 மரங்கள் 2.19 லட்சத்திற்கு ஏலம்
தேனியில் இடையூறாக இருந்த 23 மரங்கள் 2.19 லட்சத்திற்கு ஏலம்
ADDED : ஜூலை 21, 2024 08:12 AM
தேனி: தேனி பெரியகுளம் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 23 புளிய
மரங்கள் ரூ. 2.19 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
தேனி - பெரியகுளம் ரோடு மாநில நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் முதல் பொம்மைய கவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோயில்வரை 23 மரங்கள் உள்ளன. இவை போக்குவரத்திற்கு இடையூறாகவும், மரத்தை யொட்டி ஆக்கிரமிப்புகள் இருந்தன.
ரோடு அகலப்படுத்தும் வகையில் இந்த மரங்கள் அகற்ற நெடுஞ்சாலைத்துறை ஏலம் உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் ஏலம் நடந்தது.
இளநிலை பொறியாளர் சதிஸ் முன்னிலை வகித்தார்.
ஏலத்தில் 10க்கும் மேற்பட்டோர் ரூ.30 ஆயிரத்திற்கான வரையோலை செலுத்தி பங்கேற்றனர்.
ஏலம் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து ரூ. 2.19 லட்சத்தில் நிறைவடைந்தது.
23 மரங்களை ஒரு மாதத்திற்குள் அகற்றி தர ஏலம் எடுத்தவரை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இடையூறான மரங்கள் அகற்றிய பின் நகரில் போக்குவரத்து இடையூறு குறைய வாய்ப்புள்ளது.