/உள்ளூர் செய்திகள்/தேனி/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பால் பள்ளி குடிநீர் தொட்டி அமைக்க பூஜை முன்னாள் மாணவர்கள் சந்திப்பால் பள்ளி குடிநீர் தொட்டி அமைக்க பூஜை
முன்னாள் மாணவர்கள் சந்திப்பால் பள்ளி குடிநீர் தொட்டி அமைக்க பூஜை
முன்னாள் மாணவர்கள் சந்திப்பால் பள்ளி குடிநீர் தொட்டி அமைக்க பூஜை
முன்னாள் மாணவர்கள் சந்திப்பால் பள்ளி குடிநீர் தொட்டி அமைக்க பூஜை
ADDED : ஜூலை 21, 2024 08:07 AM

பெரியகுளம்: பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 52 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பால் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்ட நீர் தேக்க குடிநீர் தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜை போட்டனர்.
இப் பள்ளியில் 1972 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 52 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நடந்தது. இதில் தேனி மாவட்டம், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் முன்னாள் மாணவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
இரு நாட்கள் நடந்த விழாவிற்கு முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் அபுதாஹிர் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சங்கர் வரவேற்றார். உறுப்பினர்கள் மாரிமுத்து, ஜெயச்சந்திரன் ரவி மற்றும் தலைமை ஆசிரியர் கோபிநாத் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் பங்களிப்பாக பள்ளி வளாகத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில், 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க குடிநீர் தொட்டி அமைக்க பூமி பூஜை செய்தனர்.