/உள்ளூர் செய்திகள்/தேனி/ காட்டுப்பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம் காட்டுப்பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம்
காட்டுப்பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம்
காட்டுப்பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம்
காட்டுப்பன்றிகளால் மிளகு கொடிகள் சேதம்
ADDED : ஜூலை 21, 2024 08:06 AM
போடி; போடி மலைக் கிராமங்களில் மிளகு கொடிகளை காட்டு பன்றிகள் சேதம் ஏற்படுத்தி வருவதால் விளைந்த மிளகை பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, பிச்சாங்கரை, போடிமெட்டு, வடக்குமலை. அகமலை உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காபி பயிரிட்டு உள்ளனர். ஊடு பயிராக வளர்ந்தோங்கிய மரங்களில் மிளகு கொடிகளை வளர்த்து வருகின்றனர். கொடியில் மிளகு நன்கு வளர்ந்துள்ள நிலையில் காட்டு பன்றிகள் மிளகு கொடியை வேரோடு கடித்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விளைந்த மிளகை பறிக்க முடியாத நிலையில் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். 50 கி.மீ., தூரத்திற்கு வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் வகையில் குழிகள் அமைக்கவும், 25 கி.மீ., தூரத்திற்கு சோலார் மின்வேலி அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் முதன்மை வன பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்தது.
பரிந்துரை செய்து பல ஆண்டுகள் ஆகியும் திட்டம் செயல் படுத்தாமல் கிடப்பில் உள்ளன. வன விலங்குகளை காப்பாற்றவும், பயிர்கள் சேதம் ஏற்படுவதை தடுக்கவும் வனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க மாவட்ட வனத்துறை முன் வர வேண்டும்.