/உள்ளூர் செய்திகள்/தேனி/ இடுக்கியில் 66 வீடுகள் சேதம் வருவாய்த்துறை கணக்கீடு இடுக்கியில் 66 வீடுகள் சேதம் வருவாய்த்துறை கணக்கீடு
இடுக்கியில் 66 வீடுகள் சேதம் வருவாய்த்துறை கணக்கீடு
இடுக்கியில் 66 வீடுகள் சேதம் வருவாய்த்துறை கணக்கீடு
இடுக்கியில் 66 வீடுகள் சேதம் வருவாய்த்துறை கணக்கீடு
ADDED : ஜூலை 21, 2024 08:08 AM
மூணாறு: கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 28ல் துவங்கியது. தற்போது மழை தீவிரமடைந்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் பருவமழை சராசரி அளவை விட குறைவு என்றபோதும் மழை, காற்று ஆகியவற்றின் மூலம் சேதங்கள் அதிகரித்தன.
மாவட்டத்தில் ஜூன் ஒன்று முதல் நேற்று முன்தினம் வரையிலான மண்சரிவு மூலமும் மரங்கள் சாய்ந்தும் 56 வீடுகள் சிறியளவிலும், 10 வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாக வருவாய்துறையினர் கணக்கிட்டனர். அதேபோல் மாவட்டத்தில் பலத்த மழையால் 68.61 ஹெக்டேரில் சாகுபடி செய்த பல்வேறு பயிர்கள் சேதமடைந்தன. அதன் மூலம் 1056 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஏலம், வாழை, ரப்பர், மிளகு, கப்பை ஆகிய பயிர்கள் கூடுதல் சேதமடைந்தன. சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.