ADDED : ஜூலை 05, 2024 05:37 AM
மது பதுக்கிய இருவர் கைது
தேனி: வருஷநாடு மூலக்கடை சேர்மலை 49. அதேப்பகுதி ரஞ்சித்குமார் 26. இருவரும் அவரவர் பெட்டிக்கடைகளில் விற்பனைக்காக 14 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். அவர்களை தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை கைப்பற்றினர்.
பாம்பு கடித்து பெண் பலி
தேனி: ஏரசக்கநாயக்கனுார் இந்திரா காலனி ஆக்னஸ் மேரி 54. இவர் கேரளா 8 வது மைலில் தங்கி இருப்பு வேலை செய்து வந்தார். இவரை பாம்பு கடித்ததை கண்டு கொள்ளாமல் இருந்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பேரிசோதித்த டாகடர், ஆக்னஸ் மேரி வரும் வழியில் இறந்ததாக தெரிவித்தார்.
நிலத்தகராறில் ஒருவர் கைது
தேனி: கேரளா மூணாறு பள்ளிவாசல் எஸ்டேட் கார்மேகம் 56. இவரது மனைவி ராஜம்மாள் பெயரில் அம்மாபட்டி கால்நடை மருத்துவமனை எதிரில் நிலம் உள்ளது. நேற்று நிலத்தை பார்க்கச் சென்ற கார்மேகத்தை, மதுரை பசும்பொன் நகர் பால்சாமி 60, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினார். அல்லிநகரம் போலீசார் பால்சாமியை கைது செய்தனர். .
கல்லுாரி மாணவி மாயம்
தேனி: வடபுதுப்பட்டி காளியம்மன் கோயில் தெரு சுவேதா 21. இவர் பெரியகுளம் தனியார் கலைக் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ஜூலை 3 ல் கல்லுாரி செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர், வீடு திரும்ப வில்லை. சகோதரர் புகாரில் மாணவியை அல்லிநகரம் போலீசார் தேடி வருகின்றனர்.