/உள்ளூர் செய்திகள்/தேனி/ காலாவதி உணவு பறிமுதல் ரூ.15 ஆயிரம் அபராதம் காலாவதி உணவு பறிமுதல் ரூ.15 ஆயிரம் அபராதம்
காலாவதி உணவு பறிமுதல் ரூ.15 ஆயிரம் அபராதம்
காலாவதி உணவு பறிமுதல் ரூ.15 ஆயிரம் அபராதம்
காலாவதி உணவு பறிமுதல் ரூ.15 ஆயிரம் அபராதம்
ADDED : ஜூலை 05, 2024 05:37 AM

போடி: போடி பஸ்ஸ்டாண்ட், பள்ளிகள் அருகே உள்ள பகுதிகளில் நேற்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் டாக்டர் ராகவன் தலைமையில், உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் மதன்குமார், மணிமாறன் ஆய்வு மேற்கொண்டனர்.
பஸ்ஸ்டாண்ட், பெரியாண்டவர் கோயில் ரோடு, ஸ்டேட் பாங்க் ரோடு, பள்ளிகள் அருகே உள்ள பாஸ்ட்புட் கடைகளில் வைக்கப்பட்டு இருந்த ரசாயன கலர் கலந்த காளான்கள், பானி பூரி, காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள், கலப்பட காபி, டீ தூள்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்களை பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டன. ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டன.