/உள்ளூர் செய்திகள்/தேனி/ வருவாய்த்துறை அலுவலர்கள் தேனியில் போஸ்டர் யுத்தம் வருவாய்த்துறை அலுவலர்கள் தேனியில் போஸ்டர் யுத்தம்
வருவாய்த்துறை அலுவலர்கள் தேனியில் போஸ்டர் யுத்தம்
வருவாய்த்துறை அலுவலர்கள் தேனியில் போஸ்டர் யுத்தம்
வருவாய்த்துறை அலுவலர்கள் தேனியில் போஸ்டர் யுத்தம்
ADDED : ஜூலை 05, 2024 05:36 AM
தேனி: தேனி மாவட்டத்தில் முதுநிலை ஆர்.ஐ.,களுக்கான பதவி உயர்வு பட்டியல் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர் சங்கம், மற்றும் வருவாய்த்துறை (குரூப் 2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினரிடையே போஸ்டர் யுத்தம் நடத்தியுள்ளனர்.
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவல வளாகத்தில் ஒட்டியிருந்த போஸ்டர்களில் ' வெளியிடப்பட்ட முதுநிலை ஆர்.ஐ.,களுக்கான பதவி உயர்வு பட்டியலை ரத்து செய்து, சரியான பட்டியல் வெளியிட வேண்டும். காலதாமதம் செய்யாமல் கலெக்டர் உத்தரவு பிறப்பிக்கவும், முதுநிலை பட்டியலை வெளிப்படை தன்மையுடன் வெளியிட வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகள் வலியுறுத்தினர்.
இச் சங்கத்தினர் கோரிக்கை அட்டையுடன் பணிபுரிகின்றனர். இதை வலியுறுத்தி ஜூலை 10ல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த போஸ்டருக்கு பதில் அளிக்கும் வகையில் வருவாய்த்துறை (குரூப் 2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று ஓட்டிய போஸ்டர்களில், டி.ஆர்.ஓ., கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியதை கண்டித்தும், விதிகளுக்கு உட்பட்டு வெளியிடப்பட்ட பதவி உயர்வு பட்டியலை வரவேற்றும், கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர்.ஒ., கலெக்டர் அலுவலக பொது மேலாளருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வருவாய்த்துறையில் இரு சங்கத்தினரிடையே இடையே நடக்கும் போஸ்டர் யுத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்களிடம் இணக்கம் இல்லாத நிலை உருவாகி உள்ளது.