/உள்ளூர் செய்திகள்/தேனி/ கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா
கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா
கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா
கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா
ADDED : ஜூலை 05, 2024 05:38 AM
தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஆண்டிப்பட்டி சக்கம்பட்டி காளியம்மன் கோயில் தெரு முத்து, அவரது குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்து பேச்சுவார்த்தை நடத்தி மனு வாங்கினார். மனுவில், தனது தாத்தாவின் வேலை, அவரது சொத்துக்களை அதே பெயரில் உள்ள பெரிய தாத்தா கையப்படுத்திவிட்டார். இன்று அவரது வாரிசுதாரர்கள் உரிமை கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாக தி.மு.க., நிர்வாகி சின்னமாரி உள்ளிட்டோர் மிரட்டி வருகின்றனர். இது குறித்து பெரியகுளம் ஆர்.டி.ஓ., ஆபீஸ் விசாரணைக்காக சென்றபோதும் கொலைமிரட்டல் விடுத்தனர். போலீசிலும் புகார் அளித்துள்ளோம். ஆனாலும் தொடர்ந்து மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.