/உள்ளூர் செய்திகள்/தேனி/ மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுாதன முறையில் மனு மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுாதன முறையில் மனு
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுாதன முறையில் மனு
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுாதன முறையில் மனு
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுாதன முறையில் மனு
ADDED : ஜூலை 20, 2024 12:50 AM

தேனி : மின் கட்டணத்தை உயர்வை கண்டித்து, பெட்ரோமாக்ஸ் விளக்குகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியினர் மனு அளித்தனர்.
தேனி மாவட்ட சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவர் குருஅய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகள் தலையில் 'பெட்ரோமாக்ஸ்' விளக்குகளை ஏந்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 2006ல் தி.மு.க., ஆட்சியில் பல மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தை விட்டே வெளிறின. மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டனர். பின் சிம்னி விளக்குகள், மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகரித்து மக்கள் கற்கால வாழ்க்கைக்கு பழக ஆரம்பித்தனர். பின் முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சியில் சீரமைக்கப்பட்டு, மின் மிகை மாநிலமாக உருவானது. தற்போது தி.மு.க., அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சர் தங்கம் தன்னரசு வீடுதோறும் தலா 2 சிம்னி விளக்குகள், 10 லி., மண்ணெண்ணெய், ஆட்டுக்கல், அம்மிக்கல் வழங்க வேண்டும் என தெரிவித்து மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினர்.