அனுமந்தன்பட்டியில் மருத்துவ முகாம்
அனுமந்தன்பட்டியில் மருத்துவ முகாம்
அனுமந்தன்பட்டியில் மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 20, 2024 12:50 AM

உத்தமபாளையம் : அனுமந்தன்பட்டியில் சுகாதாரத் துறை சார்பில் வருமுன் காப்போம் திட்ட மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் மெகா மருத்துவ முகாம் துணை இயக்குநர் ஜவஹர் தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.
முகாமில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட மொபைல் எக்ஸ்ரே வாகனத்தில் பொதுமக்களுக்கு காச நோய் பாதிப்புள்ளதை கண்டறிய எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. தேனி மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், தொழுநோய் கண்டறிதல், பல், கண், காது மூக்கு தொண்டை , எலும்பு, தோல் சிறப்பு டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கப்பட்டது.
பள்ளி குழந்தைகளுக்கு நல்வாழ்வு இளந்தளிர் திட்டத்தின் மூலம் கற்றல் குறைபாடு, இரத்த சோகை, மாதவிடாய் பிரச்னை தீர்க்கும் பெமி கியூர் டானிக், வல்லாரை மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நேர்முக உதவியாளர் முருகேசன், டாக்டர் கார்த்திக், சுகாதார ஆய்வாளர் பாபு உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.