/உள்ளூர் செய்திகள்/தேனி/ போடி பஸ் ஸ்டாண்டில் தனியார் வாகன ஆக்கிரமிப்பால் பயணிகள் தவிப்பு போடி பஸ் ஸ்டாண்டில் தனியார் வாகன ஆக்கிரமிப்பால் பயணிகள் தவிப்பு
போடி பஸ் ஸ்டாண்டில் தனியார் வாகன ஆக்கிரமிப்பால் பயணிகள் தவிப்பு
போடி பஸ் ஸ்டாண்டில் தனியார் வாகன ஆக்கிரமிப்பால் பயணிகள் தவிப்பு
போடி பஸ் ஸ்டாண்டில் தனியார் வாகன ஆக்கிரமிப்பால் பயணிகள் தவிப்பு
ADDED : ஜூன் 18, 2024 07:00 AM

போடி, : போடி பஸ்ஸ்டாண்டில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தமிழக, கேரளா பகுதியை இணைக்கும் வழித்தடத்தில் போடி பஸ் ஸ்டாண்ட் அமைந்து உள்ளது. இங்கிருந்து சுற்றியுள்ள கிராமங்கள் வழியாக 23 பஸ்களும், தேனி வழியாக நீண்ட துாரங்களுக்கு 46 பஸ்களும் செல்கின்றன.
போடி பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் தவிர பிற வாகனங்கள் நிறுத்த கூடாது என நகராட்சி 12 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது. அதன் பின் வந்த அதிகாரிகள் இதை நடைமுறைப்படுத்தாததால் தற்போது டூவீலர், ஆட்டோ, சுமோ, கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்துள்ளன. மேலும் இரவில் கட்ட பஞ்சாயத்து, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி உள்ளன. இதனால் பஸ் ஸ்டாண்டிற்குள் பயணிகள் வருவதற்கு அச்சம் அடைந்து வருகின்றனர். நிழற்குடை வசதி இல்லாததால் வெயில், மழையால் பயணிகள் நனைந்தபடி பஸ்சிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு குறித்து புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
தேவாரம் வழியாக செல்லும் பஸ்களும், தேனி வழியாக போடி வரும் பஸ்களும் ஒரே பாதையில் வருவதால் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்களை தவிர்க்க தேனி, தேவாரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் வடக்கு பாதை வழியாகவும், தேனி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மேற்கு பக்கமாக செல்ல வேண்டும்.
பஸ்ஸ்டாண்டிற்குள் அனுமதி இன்றி கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த தடை விதிப்பதோடு, நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளை பாதுகாக்க பஸ்கள் நிற்கும் பகுதியில் நிழற்கூரை அமைக்க போலீஸ், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.