ADDED : ஜூன் 14, 2024 05:31 AM
ஆண்டிபட்டி: வைகை அணை அருகே அருப்புக்கோட்டைநாயக்கன்பட்டியில் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.81 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வைகை அணை எஸ்.ஐ.பிருந்தா மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பது தெரிய வந்தது. அங்கு சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட கூல் லிப், பாக்கு மற்றும் புகையிலை பாக்கட்டுகள் விற்பனைக்கு இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.81 ஆயிரத்து 596. புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் சந்திரா 61, என்பவரை கைது செய்தனர்.