புகையிலை விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
புகையிலை விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
புகையிலை விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஜூன் 14, 2024 05:31 AM
போடி: போடி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் வசிப்பவர் குமார் 60. இவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட 20 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்தார். போடி எஸ்.எஸ். புரத்தை சேர்ந்தவர் முருகன் 65.
இவர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனது பெட்டி கடையில் விற்பனை செய்வதற்காக 15 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்தார்.
போடி டவுன் போலீசார் 35 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
போடி டவுன் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பரிந்துரையின் பேரில் குமார், முருகன் ஆகியோரது கடைகளை போடி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மதன்குமார் நேற்று பூட்டி 'சீல்' வைத்தார்.