/உள்ளூர் செய்திகள்/தேனி/ மேரி மாதா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா மேரி மாதா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
மேரி மாதா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
மேரி மாதா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
மேரி மாதா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜூன் 14, 2024 05:32 AM

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கலை, அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பி.ஜெ.ஐசக் பூச்சாங்குளம் தலைமை வகித்தார்.
துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு, நிர்வாக இயக்குனர் பிஜோய் மங்களத்து முன்னிலை வகித்தனர். பெங்களூர் கிறிஸ்து ஜெயந்தி கல்லூரி துணை முதல்வர் லிஜோ பி.தாமஸ் இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் 510 பேருக்கு பட்டமளித்து பேசுகையில், வாழ்க்கை பயணத்தில் கல்வி கற்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது.
மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம், என்றார். பேராசிரியர்கள், மாணவர்களது பெற்றார்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.