Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்டத்தில் ஜூன் 27ல் ஜமாபந்தி துவக்கம் ஜூலை 5 வரை தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது

மாவட்டத்தில் ஜூன் 27ல் ஜமாபந்தி துவக்கம் ஜூலை 5 வரை தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது

மாவட்டத்தில் ஜூன் 27ல் ஜமாபந்தி துவக்கம் ஜூலை 5 வரை தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது

மாவட்டத்தில் ஜூன் 27ல் ஜமாபந்தி துவக்கம் ஜூலை 5 வரை தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது

ADDED : ஜூன் 20, 2024 05:13 AM


Google News
தேனி: தேனி மாவட்டத்தில் ஜூன் 27 முதல் ஜூலை 5வரை தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதில் வருவாய் துறை தொடர்பான குறைகளையும் மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.

ஜூன் 27 ல் பூலானந்தபுரம், சின்னமனுார், கருங்காட்டான் குளம், முத்துலாபுரம், சின்னஓவலாபுரம், ஜூன் 28 ல் தேவாரம், தேவாரம் மலை, தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், பொட்டிபுரம், சங்கராபுரம், ஜூலை 2ல் க.புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், மேலக்கூடலுார்(தெற்கு, வடக்கு), கீழக்கூடலுார்( கிழக்கு, மேற்கு), ஜூலை 3ல் அனுமந்தம்பட்டி, நாராயணத்தேவன்பட்டி (தெற்கு, வடக்கு), நாராயணத்தேவன்பட்டி மலை, காமயகவுண்டன்பட்டி, குச்சனுார், புலிக்குத்தி, மார்க்கையன்கோட்டை, ஜூலை 4ல் வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, அழகாபுரி, எரசக்கநாயக்கனுார், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனுார் மலை, ஜூலை 5ல் கோம்பை (கிழக்கு, மேற்கு), மல்லிங்காபுரம், உத்தமபாளையம்(தெற்கு, வடக்கு) கோகிலாபுரம், ராயப்பன்பட்டி கிராமத்தினர் மனு அளிக்கலாம்.

பெரியகுளம்: தாலுகா அலுவலகத்தில் டி. ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமையில் நடக்கும் ஜமாபந்தியில் ஜூன் 27 ல் கெங்குவார்பட்டி பிட் 1,2, தேவதானப்பட்டி பிட்1,2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, ஜூன் 28 ல் ஜெயமங்கலம் பிட்1,2, குள்ளப்புரம், மேல்மங்கலம் பிட் 1,2, ஜூலை 2ல் கீழவடகரை, வடகரை பிட்1,2, தென்கரை பிட் 1,2, ஜூலை 3ல் எ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம் பிட்1,2, வடவீரநாயக்கன்பட்டி.

தேனி: தாலுகா அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், ஜூன் 27 ல் ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி. ஜூன் 28 ல் கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, ஜூலை 2ல் பூமலைக்குண்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, கோவிந்தநகரம் .

ஆண்டிப்பட்டி: தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் தலைமையில் ஜூன் 27 ல் ஆண்டிப்பட்டி பிட்1,2, ஜூன் 28 ல் புலிமான்கோம்பை, திம்மரசநாயக்கனுார் பிட்1,2, ஜூலை 2ல் மொட்டனுாத்து, ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னுார், வள்ளநதி, ஜூலை 3ல் கோத்தலுாரத்து, கொத்தப்பட்டி, ராஜதானி, பழையகோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, கணவாய்பட்டி, ஜூலை 4ல் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேகமலை கிராமத்தினர் மனுகளை அளிக்கலாம்.

போடி : தாலுகா அலுவலகத்தில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.,தாட்சாயிணி தலைமையில் ஜூன் 27 ல் ராசிங்காபுரம், சிலமலை, போ. அம்மாபட்டி, ஜூன் 28 ல் போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை, ஜூலை 2ல் டொம்புச்சேரி, கூழையனுார், போடி, மேலச்சொக்கநாதபுரம், போடி மேற்குமலை, ஜூலை 3ல் கொட்டக்குடி, போடி வடக்குமலை, அகமலை கிராமத்தினர் மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us