/உள்ளூர் செய்திகள்/தேனி/ முல்லைப் பெரியாறு அணையில் மழை தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு முல்லைப் பெரியாறு அணையில் மழை தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழை தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழை தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழை தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 20, 2024 05:13 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக மழை தொடருமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1ல் அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி திறக்கப்பட்டது. அப்போது அணை நீர்மட்டம் 119.15 அடியாக இருந்தது. அதன்பின் மழையின்றி நீர்மட்டம் குறையத் துவங்கியது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக நீர்ப் பிடிப்பில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 21.2 மி.மீ., தேக்கடியில் 40.6 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு 206 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 311 கன அடியாக அதிகரித்தது.
அணை நீர்மட்டம் 117.85 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 511 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2240 மில்லியன் கன அடியாகும்.
நேற்று காலையில் நீர்ப் பிடிப்பில் மேகமூட்டத்துடன் இருந்தது.
மாலையில் மழை பெய்ய துவங்கியது. தற்போது நெல் நாற்றுகள் வளர்ந்து வரும் நிலையில் நடவு பணிகளுக்காக வயலில் தண்ணீர் நிரப்பி தயார்படுத்த வேண்டியுள்ளதால் தண்ணீர் தேவை அதிகரிக்கும். இதனால் நீர்ப் பிடிப்பில் மழை தொடர்ந்து பெய்து நீர்மட்டம் உயர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.