ADDED : ஜூன் 23, 2024 04:42 AM
போடி: போடி அருகே ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நந்தினி 25. இவரது கணவர் கணேஷ் 38. கேரளாவில் அலைபேசி கடை வைத்துள்ளார்.
குடும்பத்துடன் கேரளா சாந்தாம்பாறை பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கணேஷ் சொந்த ஊரான போடி ரங்கநாதபுரத்திற்கு செல்வதாக டூவீலரில் சென்றுள்ளார். அதன் பின் கணேஷ் அலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.
நந்தினி போடிக்கு வந்து பார்த்த போது வீட்டில் டூவீலர் மட்டும் இருந்துள்ளது பல இடங்களில் தேடியும் கணேஷ் கிடைக்கவில்லை.
நந்தினி புகாரில் போடி தாலுகா போலீசார் கணேஷ் யை தேடி வருகின்றனர்.