/உள்ளூர் செய்திகள்/தேனி/ பிரிந்திருந்த மனைவியை வெட்டிய கணவர் கைது பிரிந்திருந்த மனைவியை வெட்டிய கணவர் கைது
பிரிந்திருந்த மனைவியை வெட்டிய கணவர் கைது
பிரிந்திருந்த மனைவியை வெட்டிய கணவர் கைது
பிரிந்திருந்த மனைவியை வெட்டிய கணவர் கைது
ADDED : ஜூலை 13, 2024 07:17 AM
கடமலைக்குண்டு : கடமலைகுண்டு அருகே காமன் கல்லூரைச் சேர்ந்தவர் அய்யனார் 37, இவரது மனைவி மகேஷ்வரி 33, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து தனித்தனியே வாழ்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மகேஷ்வரி மூலக்கடை - மயிலாடும்பாறை ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அந்த வழியாக சென்ற அய்யனார் பிரிந்திருந்த மனைவியை மறித்து தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளிவிட்டு அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மகேஸ்வரி புகாரில் கணவர் அய்யனாரை கடமலைக்குண்டு போலீசார் கைது செய்தனர்.