ஆண்டிபட்டி : கள்ளர் சீரமைமைப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து ராஜதானியில் அனைத்து பார்வர்ட் பிளாக் கட்சிகள் மற்றும் பிரமலைக்கள்ளர் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜதானி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாவட்ட இணைச்செயலாளர் கோட்டைச்சாமி தலைமை வகித்தார். துணைச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பள்ளி முன்பு கூடிய கட்சி மற்றும் சமூக நல கூட்டமைப்பு நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.