/உள்ளூர் செய்திகள்/தேனி/ சேதம் அடைந்த தடுப்பு சுவரால் விபத்து அபாயம் சேதம் அடைந்த தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
சேதம் அடைந்த தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
சேதம் அடைந்த தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
சேதம் அடைந்த தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 13, 2024 05:19 AM

போடி, : போடி அருகே பத்திரகாளிபுரத்தில் இருந்து மாற்றுப் பாதையாக மீனாட்சிபுரம் செல்லும் ரோட்டில் தடுப்புச்சுவர் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
போடி அருகே டொம்புச்சேரியில் இருந்து பத்திரகாளிபுரம், விசுவாசபுரம் மெயின் ரோடு வழியாக மீனாட்சிபுரம் அமைந்துள்ளது. மாற்றுப் பாதையாக பத்திரகாளிபுரத்தில் இருந்து குறுக்குப் பாதையாக ஒன்றை கி.மீ., தூரத்தில் மீனாட்சிபுரம் அமைந்துள்ளது. இதனால் அரை கி.மீ., தூரம் சுற்றிச் செல்வது தவிர்க்கப்படுகிறது. இந்த ரோட்டில் உள்ள ஓடை பாலத்தின் தடுப்புச் சுவர் சேதம் அடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. இதனால் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் வேகமாக வருவோர் தடுப்புச்சுவர் சேதம் அடைந்துள்ளது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
தெருவிளக்கு இல்லாததால் இரவில் மக்கள் இவ்வழியாக வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
சேதம் அடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.