ADDED : ஆக 02, 2024 06:50 AM
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து 33, இவரது மனைவி ரதி 27, அதே ஊரைச் சேர்ந்தவர்.
நகை அடகு வைப்பது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த கணவர், மனைவியை தரக் குறைவாக பேசியதுடன் கம்பியால் ரதியை தாக்கியதில் காயம் அடைந்தார். இது குறித்து மனைவி ரதி கொடுத்த புகாரில் கணவன் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.