முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 02, 2024 06:50 AM
தேனி : சமூக நலத்துறை மூலம் முதல்வரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் விண்ணப்பித்து வைப்புத்தொகை, ரசீது பெறப்பட்ட பயனாளிகள் 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும்போது தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ரசீது நகல், 10ம் வகுப்பு சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பயனாளியின் புகைப்படத்துடன் ஒன்றிய அலுவலக சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம் விண்ணப்பித்தும், விபரங்களுக்கு சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.