/உள்ளூர் செய்திகள்/தேனி/ அரசு கல்லுாரி விரிவுரையாளர்கள் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம் அரசு கல்லுாரி விரிவுரையாளர்கள் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி விரிவுரையாளர்கள் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி விரிவுரையாளர்கள் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி விரிவுரையாளர்கள் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 12, 2024 05:03 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை காமராஜர் பல்கலையின் கீழ் செயல்பட்டு வந்த இக்கல்லூரி 2019 ம் ஆண்டு அரசு கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டது. தற்போது 1200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி முதல்வர் உட்பட நிரந்தர விரிவுரையாளர்களாக 4 பேர் மட்டும் உள்ளனர். கவுரவ விரிவிரியாளர்களாக 40 பேர் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றுகின்றனர். பணி நிரந்தரம் செய்ய கோரியும், நீதிமன்ற உத்தரவுப்படி யு.ஜி.சி., நிர்ணயித்துள்ள ஊதியத்தை வழங்கவும், பல்கலை மூலம் ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், நிலுவையில் உள்ள ஏப்ரல் மாத ஊதியத்தை வழங்க கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் கழக ஆண்டிபட்டி சங்க துணை தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் ஆனந்தன், துணைத் தலைவர் அழகர்சாமி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.