தேனியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
தேனியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
தேனியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜூலை 12, 2024 05:04 AM
தேனி: பழனிசெட்டிபட்டி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் சன்னாசி, மாவட்டச் செயலாளர் சம்சுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, தேனி நகரத் தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தனர்.
தேனி ஒன்றியக்குழு துணைத் தலைவர் முருகன் வரவேற்றார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, மாவட்ட, நகர, வட்டாரத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேனிக்கு ஜூலை 19 ல் வரும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்ததைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது.
பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை காங்., மாநிலத் தலைவரை தரைக்குறைவாகவும் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அண்ணாமலையை கண்டித்து மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.