பெரியகுளம், : கோவை குரும்பபாளையத்தைச் சேர்ந்த குமார் மகள் ஜான்சி 24. இரு ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் எ.புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் 28. என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.
சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி கருத்து வேறுபாட்டால் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கும் கோபித்துக்கொண்டு மீண்டும் எ.புதுக்கோட்டையில் மாமியார் சக்கரையம்மாளுடன் தங்கினார்.
சக்கரையம்மாள் தனது தங்கை சந்திராவின் மகன் வேல்முருகனுக்கும், ஜான்சிக்கும் கடந்த மாதம் மே 19ல் திருமணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜான்சி விஷம் குடித்து இறந்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.