/உள்ளூர் செய்திகள்/தேனி/ லோயர்கேம்ப் வைரவன் வாய்க்காலில் நீர் திறப்பு லோயர்கேம்ப் வைரவன் வாய்க்காலில் நீர் திறப்பு
லோயர்கேம்ப் வைரவன் வாய்க்காலில் நீர் திறப்பு
லோயர்கேம்ப் வைரவன் வாய்க்காலில் நீர் திறப்பு
லோயர்கேம்ப் வைரவன் வாய்க்காலில் நீர் திறப்பு
ADDED : ஜூன் 04, 2024 06:12 AM
கூடலுார் : கூடலுார் முதல் போக நெல் சாகுபடிக்காக லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து வைரவன் வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
கூடலுாரில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு நீர்வரத்து வாய்க்கால்களாக வைரவன் வாய்க்கால், பேய்த்தேவன் வாய்க்கால், சாமி வாய்க்கால் என உள்ளது. ஜூன் 1ல் முதல் போக நெல் சாகுபடிக்கு அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து வைரவன் வாய்க்காலில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் பிரேம் ராஜ்குமார் தண்ணீரை திறந்து வைத்தார். நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வாய்க்காலை சீரமைத்த விவசாயிகள்: ஒவ்வொரு ஆண்டும் நீர் திறப்பிற்கு முன் நீர்வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படும். இதற்காக நீர்வளத்துறையினர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுடன் விவசாயிகள் பங்களிப்பை சேர்த்து சீரமைப்பு பணி நடைபெறும்.
கடந்த சில ஆண்டுகளாக நீர்வளத் துறையினர் நிதி கொடுப்பதில்லை. இந்நிலையில் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து வாய்க்கால் முழுவதையும் தங்களது சொந்த செலவில் சீரமைத்தனர்.
விவசாயிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் ஒதுக்கீடு செய்த நிதியையாவது முறையாக விவசாயிகளுக்கு வழங்க நீர்வளத்துறையினர் முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.