/உள்ளூர் செய்திகள்/தேனி/ முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல் முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 21, 2024 08:01 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1ல் வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன் பின் ஜூன் 11ல் நீர் திறப்பு 511கன அடியாகவும், ஜூன் 25ல் 878 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பில் மழை பெய்து நீர்மட்டம் உயரத் துவங்கியதால் நீர் திறப்பு சிறிது சிறிதாக அதிகரித்து நேற்று காலை வினாடிக்கு 1400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
தற்போது மழை குறைய துவங்கியதால் நீர்வரத்து குறைந்து வருகிறது. நீர்மட்டம் 128 அடியாக உள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் நீர்மட்டம் குறையும் வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில் முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகமாகி வைகை அணையில் சேருகிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் இரு போக நெல் சாகுபடியை முழுமையாக செய்ய பெரியாறு அணையில் கூடுதல் நீரை தேக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதனால் நீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.