ADDED : ஜூலை 21, 2024 08:01 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி போலீசார் ரோந்து சென்ற போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களது பாக்கெட்டில் 60 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்துள்ளது.
விசாரணையில் கஞ்சா வைத்திருந்தவர்கள் ஜக்கம்மாள்பட்டி மருதுபாண்டியன் 25, மறவபட்டி அன்னக்கொடி 23, என்பது தெரிய வந்தது அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜக்கம்மாள்பட்டியை சேர்ந்த கவுதம், கைலாசப்பட்டியை சேர்ந்த தேவா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.